Madurai ; தி.மு.க., கொடுத்த ஏமாற்றம் அ.தி.மு.கவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்.. மத்திய தொகுதி தான் குறி !

1 month ago 4
ARTICLE AD

முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரிக்கு வலது கரமாக இருந்த பி.எம். மன்னன் அ.தி.மு.கவில் இணைந்தார்.

மதுரையில் அரசியல் செய்த அழகிரி

மதுரை மாவட்டத்தில் தி.மு.கவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி ஒரு கால கட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார். வீடுகள், டீக்கடை முதல் பெரும் நிறுவனங்கள் வரை அழகிரியின் புகைப்படங்களை பார்க்க முடியும். இதனால் புதிதாக மதுரை வரும் நபர்கள் மிரழ்ச்சியாக பார்ப்பார்கள். அழகிரி போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும். அழகிரிக்காக அவரது ஆதவாளர்கள் ஒட்டும் போஸ்டர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். தாங்கள் தான் தீவர ஆதரவாளர்கள் என காட்டிக்கொள்ள போஸ்டர்களை அடித்து மதுரை மாநகரில் சந்து பொந்தெல்லாம் ஒட்டுவார்கள். வாசகங்கள் ஒவ்வொன்றும் வாயடைக்க செய்யும் வகையில் இருக்கும். சில நேரங்களில் பரபரப்பு சூழலை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கொடுத்த ஏமாற்றம் அதிமுகவில் இணைந்த அழகிரி ஆதரவாளர்

இந்நிலையில்  அழகிரியின் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மு.க.அழகிரி, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும் அவருடனே நிழலாக இருந்தவர் மன்னன். இந்நிலையில் கடந்த வாரம் பி.எம்.மன்னன் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று பி.எம்.மன்னன் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் இணைவதற்கான காத்திருந்தும் தலைமையிடமிருந்து கீரின் சிக்னல் எதுவும் வராததால் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

அழகிரி டூ அதிமுக

இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது...,” பி.எம்.மன்னன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையில் பேருந்து ஓட்டுனராக இருந்தவர். அழகிரியின் ஆசியால் முழுமையாக அரசியலுக்கு வந்தார். திமுக இளைஞர் அணியில் பணி செய்த இவர் தொடர்ந்து தன்னை அழகிரி ஆதரவாளராக காட்டிக்கொண்டார். அழகிரி பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடி தீர்ப்பார். தற்போது அழகிரி அரசியல் ஆர்வம் இல்லாத சூழலில் இவரும் அமைதியாக இருந்தார். தொடர்ந்து திமுகவிற்கு தனது வருகை விருப்பத்தை தெரிவித்துவந்தார். திமுகவில் அழகிரி மற்றும் ஆதரவாளர்கள் பெயர் மீண்டும் அடிபட்டால் குழப்பம் ஏற்படும் என, கட்சியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது திமுகவில் வாய்ப்பு இல்லை என அதிமுகவில் இணைந்துள்ளார்” என்றனர்.

Read Entire Article