மக்களவைத் தேர்தல் 2024:

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரையில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மக்களவை தொகுதி எப்போது உருவானது..?

தூங்கா நகரம், கோயில் நகரம் என்று உலக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவோடு மக்களவை தேர்தலும் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. அரசியலில் ஆரம்பித்து பண்பாட்டு, கலை என கலக்கும் தலைநகராக மதுரை விளங்குகிறது. அரசியல் வாழ்வியலோடு உலக நாடுகளே வியக்கும் அளவிற்கு தொல்நகரங்களில் மதுரையும் ஒன்று என்று அறிஞர்கள் கூறுகின்றன. அதனால்தான் மதுரையின் வரலாறு என்பது, தமிழ் மக்களின் வாழ்வியலோடு வாழ்க்கையுடனும் கலந்ததாகவே பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வரலாறுகளை கொண்ட, மதுரை மக்களவை தொகுதி வரலாறு 1952-ம் ஆண்டு உருவானது.

வேட்பாளர்கள் யார் யார் களத்தில்..?

ஏப்ரல் 19ம் தேதி மதுரையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு. வெங்கடேசனும், பாஜக சார்பில் ராம சீனிவாசனும், அதிமுக சார்பில் டாக்டர் சரவணனும், நாம் தமிழர் சார்பில் சத்யா தேவியும் களத்தில் உள்ளனர். இதுபோக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.ராமர்பாண்டி, 12 சுயேச்சைகள் என 21 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

மதுரை மக்களவை தொகுதியை பொறுத்தவரை, கம்யூனிஸ்ட், பாஜகம் அதிமுக, நாம் தமிழர் என 4 வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளராக பார்க்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் தான் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படுகிறது.

இதுவரை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார் யார்..?

மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம் என நகருக்குள்ளேயே 5 தொகுதிகளும், புறநகரில் மேலூர் என 6 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை. இதுவரை நடந்த 17 மக்களவை தேர்தல்களில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் 8 முறையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 முறையும் வாகை சூடியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, தமாக, பாஜக கட்சி தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. 1957-ல் கே.டி.கே தங்கமணி, 1967ல் பி.ராமமூர்த்தியும், பி.மோகன் 2 முறையும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சு.வெங்கடேசன் என மொத்தமாக 5 முறை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

எத்தனை வாக்காளர்கள்..?

மதுரையில் மொத்தமாக 15,01,942 வேட்பாளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் - 7,77,145, பெண்கள் - 8,04,928, மூன்றாம் பாலினத்தவர்கள் - 198 பேர்கள் உள்ளனர். அதில் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் 9,81,650 பேர் மட்டுமே ஆகும். அதில், ஆண்கள் - 4,85,989, பெண்கள் - 4,95,607, மூன்றாம் பாலினத்தவர்கள் - 54 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம், 64.04% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.