ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான போட்டியின் போது, டெல்லி கேப்பிடல்ஸ் (DC) வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடிக்கு ஏற்பட்ட காயம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. தற்போது அவர் தனது உடல்நிலை குறித்து முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

நிம்மதி அளித்த என்கிடியின் இன்ஸ்டாகிராம் பதிவு

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கேட்ச் பிடிக்க முயன்றபோது என்கிடி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக BLK-Max சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்:"உங்கள் அன்புக்கும் செய்திகளுக்கும் நன்றி, நான் நலமாக இருக்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

என்கிடி இல்லாததால் டெல்லிக்கு நேர்ந்த பின்னடைவு

என்கிடி பாதியிலேயே வெளியேறியது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கே.எல். ராகுல் விளாசிய அபாரமான 152 ரன்களின்* உதவியுடன், டெல்லி அணி 20 ஓவர்களில் 264/2 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இருப்பினும், என்கிடி இல்லாத சூழலில் டெல்லி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாதகமான ஆடுகளத்தைப் பயன்படுத்திக் கொண்ட பஞ்சாப் பேட்டர்கள், 7 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டிப் பிடித்தனர். இது ஐபிஎல் வரலாற்றிலேயே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு (Highest Successful Run Chase) என்ற சாதனையைப் படைத்தது.

Lungi Ngidi’s Instagram story. 👏❤️ pic.twitter.com/w5HIUr2WXl

— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 26, 2026

கோட்டை விட்ட டெல்லி - கைகொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்

பந்துவீச்சு மட்டுமின்றி, ஃபீல்டிங்கிலும் டெல்லி சொதப்பியது. முக்கிய தருணங்களில் விடப்பட்ட கேட்சுகள் பஞ்சாப் அணிக்குச் சாதகமாக அமைந்தன. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களின் அதிரடியைத் தொடர்ந்து, இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

என்கிடி நலமாக இருப்பது டெல்லி அணிக்கு நிம்மதி என்றாலும், கையில் இருந்த வெற்றியை நழுவவிட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.