உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிப்பதாக, 9.30 மணி நேரப்படி, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், 80 தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் , இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி 33 இடங்களில் வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல்:

இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ( ஜூன் 4 ஆம் தேதி ) எண்ணப்பட்டு வருகிறது.