Loan Assistance Scheme : கொத்து கொத்தாக திட்டங்கள்.! ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்- அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிங்க

15 hours ago 1
ARTICLE AD

தமிழக அரசின் கடன் உதவி திட்டங்கள்

தமிழகத்தில் பங்வேறு கடன் உதவித்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலை இல்லாதவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

இந்த திட்டத்தில் பல்வேறு மானிய கடன் உதவியானது வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தில் பயன்பெற  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் பல்வேறு பல்வேறு மானிய கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)

வேலையில்லாதவர்களின் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின், குறிப்பாக படித்த மற்றும் வேலையின்மை பிரச்சனைகளை குறைக்கும் நோக்கத்தில் "வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)" என்ற திட்டத்தின் மூலம் 25% மானியத்துடன் (அதிகபட்ச மானியம் ரூ.3.75 லட்சம்) கூடிய வங்கி கடன் (அதிகபட்சம் ரூ. 15.00 லட்சம்) வழங்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)

படித்த முதல்தலைமுறை இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் வணிகத் திட்டங்களைத் தயாரிக்க உதவுவதுடன், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களை அமைப்பதற்கு 25% மானியத்துடன் (அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சம்) கூடிய வங்கி கடன் (ரூ. 10.00 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 5.00 கோடி வரை) மற்றும் 3% வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)

SC/ST தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் எந்தவொரு SC/ST தனிநபர், கூட்டாண்மை நிறுவனங்கள். ஒரு நபர் SC/ST சமூகங்களைச் நிறுவனம், நிறுவனங்களுக்கு 35% மானியத்துடன் பங்குதாரர்கள் வரையறுக்கப்பட்ட (அதிகபட்சமாக உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ. 1.00 கோடி, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ. 75.00 லட்சம் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.50.00 லட்சம்) கூடிய வங்கிக் கடன் மற்றும் 6% வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் கைவினைத் திட்டம் (KKT)

கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில், தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு மாற்றுவதர்க்காக 25% மானியத்துடன் (அதிகபட்ச மானியம் ரூ.50 ஆயிரம்) கூடிய வங்கி கடன் (அதிகபட்சம் ரூ. 3.00 லட்சம்) மற்றும் 5% வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES)

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பெண் தொழில் முனைவோர்களுக்காக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 25% மானியத்துடன் (அதிகபட்ச மானியம் ரூ.2.00 இலட்சம்) கூடிய வங்கி கடன் (அதிகபட்சம் ரூ. 10.00 லட்சம்) வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டங்களுக்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article