பாரீஸ் ஒலிம்பிக் 2024:

பாரீஸ் ஒலிம்பிக் 2024 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சீனா 37 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 54 வது இடத்தில் உள்ளது.

இந் நிலையில் தான் இந்திய ஹாக்கி அணி இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற காலிறுதி சுற்றில் கிரேட் பிரிட்டன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அண் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல் மற்றொரு மகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அதாவது பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகிறது.

லக்ஷ்யா சென் முன்னிலை:

இதில் உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷ்யா சென், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் விளையாடி வருகிறார். அதன்படி தற்போதுவரை இந்திய வீரர் லக்ஷ்யா சென் தான் முன்னிலையில் இருக்கிறார். 14-9 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.