தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த லட்சுமி மேனன் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு தோற்றத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவை கலக்கிய லட்சுமி மேனன்

கடந்த 2012ம் ஆண்டு தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அப்படத்தில் அவர் ஏற்று நடித்த அர்ச்சனா கேரக்டர் தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகர்கள் வரை அவரை கொண்டு சேர்த்தது. அதே ஆண்டில் வெளியான கும்கி படம் லட்சுமி மேனன் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என சொல்லலாம். டிவியில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினயன் ரகுவின்டே ஸ்வந்தம் ரஸியா என்ற மலையாள படம் மூலம் சினிமாவுக்கு லட்சுமி மேனனை அழைத்து வந்தார்.

அங்கிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் குறுகிய காலக்கட்டத்திலேயே பிரபலமாக திகழ்ந்தார். தொடர்ந்து குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதேசமயம் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கை கேரக்டரில் நடித்தார். இதனிடையே படிப்புக்காக சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் மீண்டும் 2021ம் ஆண்டு புலிக்குத்தி பாண்டி என்ற படம் மூலம் நடிக்க வந்தார். இப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ஆதி நடித்த சப்தம் படத்தில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பு

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த லட்சுமி மேனன், இப்போது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார் என சொல்லப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் காமராஜ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் லட்சுமி மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங்கிற்கு சரியாக வராததால் அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் மதுபான பார் ஒன்றில் தோழிகளுடன் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரை தாக்கியதாக வழக்கும் அவர் மேல் பாய்ந்தது.

Lakshmi Menon Ah இது , அவங்க Career Ah அவங்களே காலி பண்ணி இன்னைக்கு அடையாளம் தெரியாத அளவு மாறி போய்ட்டாங்க 😐 pic.twitter.com/tJb8CeSMgH

— Akilan Tamilanin Cinema (@TamilaninCinema) September 17, 2026

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வீடியோ

இந்த நிலையில் லட்சுமி மேனன் தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அது லட்சுமி மேனன் தான் என நம்பவே மறுக்கின்றனர்.