Kuthambakkam Bus Stand: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மிக முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வந்தது. சென்னை நகர் பகுதியில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு 90% அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 10% அரசு பேருந்துகள் தென்மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் (Kuthambakkam Moffesil Bus Terminal)

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து விரைவில், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. குத்தம்பாக்கத்தில் சுமார் 427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழிகள் இந்த பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள் என்ன ?

இந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. அதேபோன்று இந்த இடத்தில் 41 கடைகள், எட்டு டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போன்று இங்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 1811 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள், வாகன நிறுத்தும் இடத்தில் செய்யப்பட உள்ளன.

மாநிலத்திலேயே முதல் முறையாக...

மாநிலத்திலே முதல்முறையாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதியும் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என 2019 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அமைய உள்ளது.

எங்கு அமைந்துள்ளது ?

மதுரவாயில் அடுத்த பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டி நேர் எதிரில், திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலத்தில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

எந்தெந்த ஊர் பேருந்துகள் இயக்கப்படும்

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் வடக்கு , மேற்கு மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. அதன் பிறகு கோயம்பேடு பேருந்து நிலைத்தில் இருந்து பேருந்துகள் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? kuthambakkam Bus Stand Open Date

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் 80 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.