திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தில் சிமெண்ட் கட்டையில் முதியவர் ஒருவர் உறங்கி கொண்டிருந்தார். திடீரென தண்ணீர் வரத்து அதிகமானதால் அவர் சிக்கிகொண்டார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இருந்த முதியவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.