இந்திய வீரர் கே.எல் ராகுலுக்கும் பாக்சிங் டெஸ்ட் போட்டிக்கும் இடையே மிகப்பெரிய பந்தம் உள்ளது அது என்ன என்பதை இத்தொகுப்பில் காண்போம்.

பாக்சிங் டே டெஸ்ட்( Boxing Day Test):

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிக்கை அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைப்பர். அந்த வகையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது,

இதையும் படிங்க: Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

கே.எல் ராகுல்:

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஓரே இந்திய பேட்ஸ்மேன் கே.எல் ராகுல், இந்த தொடரில் இது வரை இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரரும் இவர் தான். இது வரை இந்த தொடரில் கே.எல் ராகுல் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார்.

பாக்சிங் டே டெஸ்டில் கே.எல்.ராகுலின் சாதனை:

பாக்சிங் டே டெஸ்டில் ராகுல் இதுவரை தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார். இது தவிர, பாக்சிங் டெஸ்ட்டுக்கும் ராகுலுக்கும் பெரிய தொடர்பு உள்ளது.

2014-ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பாக்சிங் டே டெஸ்ட் மூலம் ராகுல் தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கினார். அறிமுக டெஸ்டில் ராகுலால் பெரிய அளவில் பேட்டிங்கில் ரன்களை அடிக்க முடியவில்லை. இரண்டு இன்னிங்சிலும் அவர் 03 மற்றும் 01 ரன்கள் மட்டுமெ எடுத்து ஆட்டமிழந்தார்

அதன்பிறகு 2021 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் செஞ்சுரியனில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில் ராகுல் தொடர்ந்து சதம் அடித்து அசத்தினார் ராகுல். 2021 இல், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்டில் விளையாடியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல் 16 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்தார்.

KL Rahul played an unbelievable knock in the previous Boxing Day Test at Centurion. 🙇‍♂️🇮🇳pic.twitter.com/e6fSmkFyiL

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 21, 2024

அடுத்தப்படியாக 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி பாக்சிங் டே டெஸ்டிலும் விளையாடியது. இந்தப் போட்டியிலும் கே.எல்.ராகுலின் சிறப்பாக விளையாடி, முதல் இன்னிங்சில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார்.

ஹாட்ரிக் சதம் அடிப்பாரா?

தற்போது மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் கே.எல்.ராகுலிடமிருந்து சதம் வருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .மேலும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் நடந்த முடிந்த , மூன்று டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அதிக ரன்கள் எடுத்தவர்களில் பட்டியலில் கே.எல் ராகுல் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 47.00 சராசரியில் 235 ரன்கள் எடுத்துள்ளார்.