இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா தனது புதிய மாடல் எஸ்.யு.வி.-யான ‘கியா சிரோஸ்’ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

கியா சிரோஸ், Sub 4m SUV மாடல் கியா சோனட், செல்டோசைவிட சற்று பெரியதாகவும் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவை கியா இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. 2025-ல் பிப்ரவரில் விற்பனை தொடங்க இருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பு:

கியா சிரோஸ் புதிய ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. வெர்டிக்கல் எல்.இ.டி. பகலில் ஒளிரக்கூடிய லைட்ஸ், பம்பர், ஈர்க்கும் வகையிலான ஸ்டைல், ரூஃப்லைன், 17-இன்ச் அலாய் சக்கரங்கள், L - வடிவ எல்.இ.டி. டெயில் லைட்ஸ் என இந்த மாடலை மெருக்கேற்றும் அளவிற்கு வடிவமைக்கப்படுள்ளது.

30 இன்ச் டுயல் ஸ்க்ரீன் செட்டப், டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, Apple கார் ப்ளே, டிஜிட்டல் டைர்வர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், USB -C போர்ட்ஸ், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, சன் ரூஃப், பார்க்கிங்க் சென்சார் என பலவேறு சிறப்பம்சங்களை இந்த மாடல் கொண்டுள்ளது.

Level 2 அட்வான்ஸ்டு ஓட்டுநர் அசிஸ்டெண்ட்ஸ் சிஸ்டம் (ADAS),Lane keep assitance உள்பட 16 adaptive சிறப்பு செயல்பாடுகள் இருக்கிறது. இந்த SUV-யில் 6 ஏர்பேக்ஸ், எல்க்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கியா சிரோஸ் பெட்ரோல், டீசல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். பெட்ரோல் வேரியண்ட் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் உடன் 118 bhp மற்றும் 172 Nm டார்க், 7 ஸ்பீட் டுயல் க்ளச் உடனும் டீசல் வேரியண்ட் 1.5 லி எஞ்ஜின், 116 bhp and 250 Nm டார்க் சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் அல்லது கன்வர்டர் ஆட்டோமெடிக்க ட்ரான்ஸ்மிசன் உடனும் வருகிறது. ஃப்ரோஸ்ட் ப்ளூ, பியூட்டர் ஆலிவ், அரோரா பிளாக் பெர்ல், இன்டென்ஸ் ரெட், கிராவிட்டி கிரே, இம்பீரியல் ப்ளூ, ஸ்பார்க்லிங் சில்வர் பிளஸ் க்லேசியர் ஒயிட் பெர்ல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. சிரோஸின் நீளம் 3,995 மிமீ, அகலம் 1,800 மிமீ மற்றும் உயரம் 1,665 மிமீ. 2,550 மிமீ வீல்பேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

2025, ஜனவரி,3 -ம் தேதி முதல் கியோ சிரோஸ் முன்பதிவு செய்யலாம். டர்போ-பெட்ரோல் வேரியண்ட்கள் ரூ.9.63 லட்சம் முதல் ரூ.14.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை, சிரோஸ் சுமார் ரூ.10 லட்சத்தில் அறிமுகமாகி அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.