Kerala Landslide: கேரளா நிலச்சரிவில் 300-ஐ நெருங்கும் உயிரிழப்பு - 60 தமிழர்களின் நிலை என்ன? தேடுதல் பணி தீவிரம்

1 year ago 7
ARTICLE AD

Kerala Landslide: கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.

300-ஐ நெருங்கும் உயிரிழப்பு:

வயநாடு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை அங்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் ஏராளமானோர் காணாமல் போயினர். தொடர்ந்து, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடங்கி ராணுவம் வரை, நான்காவது நாளாக மிட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை 298 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோரை தேடும் பணி தொடர்வதால், பலி எண்ணிக்கை 300-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 தமிழர்களின் நிலை என்ன்?

நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடு ஆகிய கிராமங்கள், கடும் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. அங்கிருந்து பெரும்பாலான வீடுகள் மண்ணோடு மண்ணாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, இந்த விபத்தில் அந்த கிராமப் பகுதிகளில் தங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்ட தமிழர்களை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், பொதுமக்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதால், காணாமல் போன பலரும் உயிருடன் இருக்கக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

27 மாணவர்கள் உயிரிழப்பு:

வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு முதன்மை பள்ளி மற்றும் சூரல்மலா கிராமத்தில் உள்ள வெள்ளர்மலா பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்தன. 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 23 மாணவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இதில், சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 32 பேரும், முண்டக்கை பள்ளியில் படித்து வந்த 18 பேரும் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Read Entire Article