நெல்லையில் கவின்குமார் என்ற பொறியியல் பட்டதாரி என்ற இளைஞர் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்ததால், அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் வெட்டிக்கொலை செய்தார். கவின் பட்டியலின சாதி என்பதால் அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பு இல்லை:

இந்த நிலையில், கவினின் காதலி சுபாஷினி என்ற இளம்பெண் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கும் கவினுக்கும் உள்ள உறவு என்னவென்று யாருக்கும் தெரியாது என்றும், கவின் கொலையில் தனது அப்பா மற்றும் அம்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், சுர்ஜித்தின் தந்தை சரவணன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது தாய் கிருஷ்ணகுமாரி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுபாஷினி வீடியோ ரிலீஸ் செய்துள்ளார்.