கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டதா? அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது தொடர்பாக தமிழ் நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரூர் துயர சம்பவம்:

தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரச்சார திட்டத்தை அண்மையில் அறிவித்தார். அதன்படி, திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சார பயணத்தை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இது தமிழ் நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழ் நாடு அரசு விளக்கம்:

இந்த நிலையில் தமிழ் நாடு அரசின் செய்தித்தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விஜய் பிரச்சார கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,” தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவது ஆற்றுப்பாலமும்,பெட்ரோல் பங்கும் உள்ளது. இரண்டாவதாக உழவர் சந்தை மிக குறுகிய இடம் என்பதால் 5 ஆயிரம் பேட் மட்டுமே திரள முடியும். அதனால் வேலுச்சாமிபுரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறிய போது அதை தவெகவினர் ஏற்றுக்கொண்டனர் என்று கூறியுள்ளார்.