கரூர் துயர சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்:

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் 41 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

விஜய்க்கு தலைமை பண்பு இல்லை:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் கருத்து தெரிவித்த நீதிபதி செந்தில் குமார் “ கரூர் துயர சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) நிகழ்ந்துள்ளது. என்ன மாதிரியான கட்சி இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை. மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.க.வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.