Karur Election Results 2024: கரூரில் மீண்டும் வெல்வாரா ஜோதிமணி..?- ‘டஃப் பைட்’ கொடுக்கும் பாஜக, அதிமுக

1 year ago 6
ARTICLE AD

Karur Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. அதன்படி, கரூரில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வாக்காளர்களும் & வேட்பாளர்களும்:

ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 14 லட்சத்து 29 ஆயிரத்து 790 பேர் கரூர் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.  காங்கிரஸ்  சார்பில் தற்போதைய எம்.பி., ஆன ஜோதிமணி, பாஜக சர்பில் செந்தில்நாதன், அதிமுக சார்பில் தங்கவேல் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிட்டனர்.

பதிவான வாக்குகள் விவரம்:

தேர்தல் ஆணைய தரவுகளின்படி கரூர் மக்களவை தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி,  கரூர்,  கிருஷ்ணராயபுரம் (தனி),  மணப்பாறை மற்றும் விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் 14 லட்சத்து 29 ஆயிரத்து 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், கரூர் தொகுதியில் 78.70 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதாவது ஆண் வாக்களர்களில் 78.01 சதவிகிதம் பேரும், பெண் வாக்காளர்களில் 79.35 சதவிகிதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 62.22 சதவிகிதம் பேரும் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

கடந்த தேர்தல் விவரம்:

2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 6,95,697 வாக்குகள் (63.06%) பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 2,75,151 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 38,543 வாக்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்

Read Entire Article