Karuppu: கருப்பு எனும் நெருப்பு.. சுத்தி சுத்தி பாசிட்டிவ் ரிவியூ! சூர்யா ரசிகர்கள் படுகுஷி!

3 weeks ago 4
ARTICLE AD

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் சூர்யா. விஜய் மற்றும் அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா. இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கருப்பு. கடந்தாண்டே ரிலீசாக வேண்டிய இந்த படம் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

கருப்பு காட்டில் வசூல் மழை:

இந்த சூழலில், இன்று இந்த படம் ரிலீசாகியுள்ளது. பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களே வருவதால் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மிகவும் திறமைவாய்ந்த நடிகரான சூர்யாவிற்கு  சிங்கம் 2 படத்திற்கு பிறகு திரையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக எதுவுமே அமையவில்லை. அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு அவர் எதிர்பார்த்த என்ஜிகே, எதற்கும் துணிந்தவன், காப்பான் போன்ற படங்கள் கம்பேக் தரும் அளவிற்கு வெற்றியைத் தரவில்லை.

சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி:

ஓடிடி-யில் வெளியாகி சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படமும் தோல்வி அடைந்ததால் சூர்யா ரசிகர்கள் அவரது கம்பேக்கிற்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்த சூழலில், இன்று வெளியாகியுள்ள கருப்பு படத்திற்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவிற்கு திரையரங்கில் வெற்றி கிடைத்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களுக்கான காட்சிகளும் திரையரங்கில் நிரம்பி வருகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நட்சத்திர பட்டாளங்கள்:

சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். நட்ராஜ், சுவாசிகா, சுப்ரித் ரெட்டி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தை கார்த்திக், த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து ரசித்தனர். குடும்ப கதையாக ஆக்ஷன் படமாக அமைந்துள்ள இந்த படம் குறைந்த பட்ஜெட்டிலும் தயாரிக்கப்பட்டு இருப்பதால் வசூலையும் குவிக்கும் என்று கூறப்படுகிறது.

Read Entire Article