Karuppu: உங்களை காயப்படுத்தும் எண்ணமில்லை.. இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு!

2 weeks ago 3
ARTICLE AD

கருப்பு படத்தில் இளையராஜாவை கிண்டல் செய்து காட்சி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அதுதொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

வசூலை அள்ளும் கருப்பு படம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “கருப்பு”. இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி, சுவாசிகா, ஷிவதா என பலரும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் கடந்த மே 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால் மே 15ம் தேதி வெளியானது. இந்த படம் 2026ம் ஆண்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

A special gift for all the ANBAANA FANS ♥️

The One @Suriya_offl - title card from #Karuppu 🔥

Blockbuster entertainment in theatres now!

A @SaiAbhyankkar Musical 🎵#KaruppuBlockbuster @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika… pic.twitter.com/OzgwMMyG8x
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 18, 2026

கருப்பு படம் திரையிடப்பட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் அளவிற்கு ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி என பலரும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற கருப்பசாமி பாடலுக்கு தியேட்டரில் பலர் சாமி வந்து ஆடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி மீது விமர்சனம்

அதேசமயம் கருப்பு படம் கடுமையான விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. படத்தின் கதையில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும், ப்ரோமோஷன் மூலம் ஆர்.ஜே.பாலாஜி ஏமாற்றி விட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான நிலையில் சில நபர்களை குறிப்பிட்டு கிண்டலடிக்கும் வகையில் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் இளையராஜா சம்பந்தப்பட்ட காட்சியும் ஒன்றாகும். அதாவது இளையராஜா தன் பாடலுக்கு காப்புரிமை கேட்டு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இதனைக் குறிப்பிட்டு தான் அந்த காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இளையராஜா ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

#Pressrelease #PublicAnnouncement #Karuppu #MaestroIlayaraaja pic.twitter.com/hdgP3wZhBL
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 19, 2026

இந்த நிலையில் ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. 50 வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.

உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Entire Article