நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் இதனை பகிர்ந்தாலோ அல்லது சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “கருப்பு”. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் பல பிரச்னைகளுக்குப் பின் மே 14ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து சூர்யா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கருப்பு படத்தின் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆனால் கடைசி நேரத்தில் பணப் பிரச்னையில் படம் சிக்கியதால் இன்று திட்டமிட்டபடி வெளியாகவில்லை. நேற்று முதல் பிரச்னையை சரி செய்ய பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் இன்று மாலை வெளியாகும் அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தது. இதுதொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கண் கலங்கி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

Public notice from Lawyer @lawyervijayan.#Karuppu @prabhu_sr pic.twitter.com/JhLoOhLEMW

— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 14, 2026

இந்த நிலையில் கருப்பு படம் வடமாநிலங்களில் இன்று திரையிடப்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சரியான தகவல் சென்றடையாததால் இந்த பிரச்னை நடந்ததாக சொல்லப்படுகிறது. எனினும் முதல் பாதி படம் திரையிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள, இயக்குனர் ஆர்.ஜே,பாலாஜி இயக்கி மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கருப்பு திரைப்படம் தியேட்டர், சேட்டிலைட் ஒளிபரப்பு, OTT, வெளிநாட்டு வெளியீடு மற்றும் பிற வர்த்தக உரிமைகள் மூலம் மிகுந்த வணிக மதிப்பைக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 3,000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தினால் அனுமதி இல்லாமல் மற்றும் சட்டவிரோதமாக தயாரிப்பாளரின் அனுமதியின்றி, வடஇந்தியாவின் சில திரையரங்குகளில் “கருப்பு” திரைப்படத்தின் தமிழ் பதிப்பு திரையிடப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டவிரோத திரையிடலின் விளைவாக, திரைப்படத்தின் காட்சிகள், வீடியோ கிளிப்புகள் மற்றும் பதிப்புரிமை பெற்ற பிற உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வழியாக பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே, கருப்பு திரைப்படத்துடன் தொடர்புடைய எந்தவொரு காட்சிகளையும், கிளிப்புகளையும் அல்லது கசிந்த (leaked) காட்சிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூ ட்யூப், டோரண்ட் இணையதளங்கள் அல்லது வேறு எந்த ஆன்லைன்/ஆஃப்லைன் தளங்கள் மூலமாகவோ பதிவிறக்கம் செய்தல், சேமித்தல், பகிர்தல், பதிவேற்றம் செய்தல், மறுபதிவு செய்தல் அல்லது பரப்புதல் ஆகியவை அனைத்தும் இந்தியாவின் பதிப்புரிமைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றங்களாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய செயல்கள் கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் கருப்பு திரைப்படத்துடன் தொடர்புடைய எந்தவொரு அனுமதியற்ற விஷயங்களையும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, அணுகவோ, சேமிக்கவோ, பரப்பவோ, பகிரவோ அல்லது வெளியிடவோ கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள். இத்தகைய செயல்களில் இனிமேலும் ஈடுபடுபவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.