தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நிச்சயத்தில் மருதுவுக்கு பதிலாக கார்த்திக் ரேவதி கழுத்தில் மோதிரத்தை போட்டு விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

குழப்பமான சாமுண்டீஸ்வரி:

அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்தியை சந்தித்து நான் சொன்ன மாதிரியே மோதிரத்தை போட வைத்துட்டேன் பாரு என்று சொல்ல, கார்த்திக் அத்தை என்ன நடந்ததுனே தெரியாமல் பேசாதீங்க என்று நடந்ததை சொல்ல சாமுண்டீஸ்வரி கன்பியூஸ் ஆகிறாள்.

அடுத்து மருதுவை கூப்பிட்டு அவனது கையை திறக்க சொல்ல கையில் மோதிரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறாள். இதை தொடர்ந்து வீட்டில் சல்லடையில் நிலவை பார்த்து விட்டு தங்களது ஜோடியை பார்க்கும் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

சல்லடையில் கார்த்தியை பார்த்த ரேவதி:

வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் ரேவதி உங்களை தான் பார்க்கணும், அதுக்கு தான் நாங்க ஆசைப்படுறோம் என்று சொல்ல கார்த்திக் இந்த பங்ஷனுக்கு வருகிறான். மயில்வாகனம் மருதுவை திசை திருப்பி அவனது ஷூவுக்குள் கட்டெறும்பை போட்டு விட, ரேவதி சல்லடையில் நிலவை பார்த்து விட்டு மருதுவை பார்க்க திரும்பும் போது மருதுவை எறும்பு கடிக்க அவன் கீழே குனிய ரேவதி மருதுவுக்கு பின் நின்று கொண்டிருந்த கார்த்தியை பார்க்கிறாள்.

ரேவதி கார்த்தியை பார்க்க இதை சாமுண்டீஸ்வரி பார்த்து கடுப்பாக வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.