இங்கிலாந்தில் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இன்று தனது 66 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரதுப் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

கபில் தேவ் போட்டி கட்டணம்:

முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ், இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர், இவர் 1983 இல் அனைத்து தடைகளையும் கடந்து முதன்முறையாக இந்திய அணியை உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் கபில் தேவ் மற்றும் 1983 உலகக் கோப்பை வென்ற சக வீரர்கள் போட்டி கட்டணமாக 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

தற்போதைய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில், அந்தத் தொகை 1,000 மடங்கு அதிமாகும், தற்போது ஒரு போட்டிக்கு ரூ. 15 லட்சம் ஊதியமாக இந்த வீரர்கள் பெறுகின்றனர்.

கபில் தேவ் சொத்து மதிப்பு:

கபில்தேவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் $30 மில்லியன் டாலராக உள்ளது என்றும் இது இந்திய மதிப்பில் ரூ.252 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கபில்தேவ் ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், அவருக்கு பிராண்ட் ஒப்பதங்கள் தான் அவரது வருமானத்தின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. கபில் தேவ் கிரிக்கெட் வர்ணனைகளிலும் ஈடுபடுகிறார், மேலும் விளம்பர படங்களில் அவர் நடிப்பதன் மூலம் அவருக்கான வருமானத்தை கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: ஆண்டுக்கு 8 கோடி வருமானம்.. விலையுயர்ந்த கார்கள்.. சாஹல்-தனஸ்ரீ சொத்து மதிப்பு இவ்வளவா?

கபில் தேவ் AIPL ABRO, Palmolive மற்றும் Boost போன்ற பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்து, அந்த பிராண்டுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்டுக்கு 20 முதல் 30 லட்சம் வரை ஊதியமாக பெறுகிறார். வர்ணனையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வெளி நிகழ்ச்சிகளில் கொள்ளுதல் மூலம் வரும் வருமானத்தை ஆண்டுக்கு சுமார் ரூ.12 கோடி சம்பாதிக்கிறார்.

கபில்தேவ் சொகுசு வீடு

கபில்தேவ் மற்றும் அவரது மனைவி ரோமி, டெல்லி சுந்தர் நகரில் உள்ள ஒரு பெரிய பங்களாவில் தங்கியுள்ளனர். இந்த பங்களா டெல்லி கோல்ஃப் கிளப்பின் அருகாமையில் உள்ளது, ஓய்வுக்குப் பிறகு அங்கு தான் கபில் தேவ் அதிக நேரத்தை செலவிடுகிறார்.

சுந்தர் நகரில் உள்ள கபிலின் பங்களாவின் முதல் தளத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாடகைக்கு இருந்தது. ஆனால் 1983 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, கபிலும் அவரது மனைவியும் பங்களாவிற்குச் செல்ல BPCL வளாகத்தை காலி செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்

கபில் தேவ் கார் கலெக்‌ஷன்:

கபில் தேவ் கேரேஜிலும் ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ளார். கபிலின் கார் கலெக்‌ஷன் மட்டும் ரூ.10 கோடியை தாண்டியுள்ளது. அவர் மெர்சிடஸ் சி220டி (Mercedes C220D), டோயோடா ஃபார்ட்ச்சுனர் (Toyota Fortuner), மெர்சிடஸ் ஜிஎல்எஸ் 350 (Mercedes GLS 350 D ) மற்றும் போர்ச்சே பனாமெரா(Porsche Panamera) ஆகியவற்றை வைத்துள்ளார்.