புதிதாக அமையுள்ள அரசுக்கும் விஜய்க்கும் திமுக எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக கட்சி 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜயின் தலைமையில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பனையூரில் இன்று காங்கிரஸின் முக்கிய தலைவர்கள், வெற்றி எம்எல்ஏக்கள் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், ஆதரவு தெரிவிப்பதற்கான கையெழுத்தை எம்எல்ஏக்கள் போட்டனர். காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைத்ததால், திமுக உடனான 10 ஆண்டு கூட்டனி முடிவுக்கு வந்தது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை தவெக தலைவர் விஜய் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தியும் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “இது ஒரு மக்களாட்சி, மக்களின் தீர்ப்பும் முடிவுமே மேலானது. நாம் அதை மதிக்க வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட அரசுக்கும் விஜய்க்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அரசில் இல்லை என்பதற்காக, மக்களுக்காகப் போராடவோ நிற்கவோ மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல. மக்களுக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்” என்று கூறினார்.

#WATCH | Chennai, Tamil Nadu: DMK MP Kanimozhi says, “…It is a democracy and people's verdict and decision is supreme. We have to respect it. We accept what people have chosen. And I wish the newly formed government and Mr Vijay the best… Just because you are not in the… pic.twitter.com/jMNEyZbkye

— ANI (@ANI) May 6, 2026

முன்னதாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் முதலமைச்சருக்கும் வாழ்த்துகள் என்று விஜயின் பெயரை குறிப்பிடாமல் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.