வானிலை மைய அறிவிப்பின்படி காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை. ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் 3 மணி நேர மழைக்கே 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்றால் சாலையில் உள்ள மரம் வீட்டின் மின் உயர் விழுந்து விபத்து அதிஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது

சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு காற்று,இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

3 மணிநேரத்துக்கு மேலாக பெய்த மழையின் காரணமாக சின்ன காஞ்சிபுரம், செட்டிதெரு, மேட்டு தெரு, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு போன்ற முக்கிய சாலையில் மழை நீர் தேங்கி அவ்வழியே செல்லும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பெய்த மழை ஶ்ரீபெரும்புதூரில் 7 செ.மீ மழை பதிவானது

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரம் கன மழை பெய்தது, பதிவான மழை அளவு

ஶ்ரீபெரும்புதூர் - 7 செ.மீ
குன்றத்தூர் - 5.4 செ.மீ
வாலாஜாபாத் - 3.6 செ.மீ
காஞ்சிபுரம் - 3 செ.மீ
வாலாஜாபாத் - 1.9 செ.மீ
உத்திரமேரூர் - 4.6 செ.மீ என மொத்தம் காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் 24.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது

கீரை மண்டபம் அருகே பனாமுடீஷ்வரர் கோவில் எதிரே சாலை ஓரமாக உள்ள பெரிய மரம் பலத்த காற்று காரணமாக கீழே விழுந்தால் அதன் அருகே உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் உயர்கள் அறுந்து விழுந்தால், அப்போகுது யாரும் செல்லதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது.