இந்திய சினிமாவின் நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகத்துக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது முதல் இன்று வரை திரைத்துறையில் அவரின் திறமையை நிரூபிக்காத இடமே இல்லை எனும் அளவுக்கு நடிகர், பாடகர், நடன அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என அனைத்து இடங்களிலும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்துள்ளார்.

கமல்ஹாசன் ஒரு உண்மையான கலைஞன் என்பது அவர் எடுத்து கொள்ளும் சிரமத்தில் இருந்ததே வெளிப்பட்டு விடும். கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் அவரே ரோல் மாடலாக திகழ்கிறார். இந்த வயதிலும் அதே சுறுசுறுப்புடன் படு பிஸியாக சுழன்று கொண்டு இருக்கிறார். அவரின் ஒவ்வொரு பரிணாமம் பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படம் கமலுக்கு நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அவர் மிகவும் முனைப்போடு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் மற்றும் புராண கதையை மையமாக கொண்டு பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரம்மாண்டமான தயாரிப்பில் இன்று உலகெங்கிலும் வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். அவரின் தோற்றமும் நடிப்பும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

அதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது. சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத், சமுத்திரக்கனி, விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'இந்தியன் 2' படத்தின் ட்ரைலர் கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்றைய அரசியல் கட்டமைப்பில் இந்தியன் தாத்தா திரும்ப வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கதையை அடிப்படையாக கொண்டு இந்தியன் 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 25ம் தேதி வெளியான இந்தியன் 2 ட்ரைலர் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் 'இந்தியன் 2' படத்திற்காக சம்பளமாக நடிகர் கமல்ஹாசன் எத்தனை கோடி பெற்றார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்படத்திற்காக கமல்ஹாசன் 150 கோடி சம்பளம் பெற்றார் என கூறப்படுகிறது.