Kamala Kamesh: பிரபல நடிகையான கமலா காமேஷ் 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கமலா காமேஷ் காலமானார்:

தமிழ் சினிமாவில் 80-களில் மிகவும் பிரபலமான நடிகையான கமலா காமேஷ், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர். அவருக்கு வயது 72. கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை என சுமார் 480 படங்களில் அவர் நடித்துள்ளார். இயக்குனர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் அவர் ஏற்று நடித்த, கோதாவரி எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கடைசியாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ”வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தார். கடந்த 1974ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்ட கமலாவிற்கு, உமா ரியாஸ் என்ற மகள் இருக்கிறார்.