விமான நிலையத்திற்கு வந்தபோது கள்ளழகர் போல வந்தார் என கூறிய நிலையில் விஜயை கள்ளழகர் வேடமிட்டு போஸ்டர் ஒட்டிய த.வெ.கவினர்.

சித்திரைத் திருவிழாவில் விஜய் போஸ்டர்

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி பல்வேறு கூட்டங்களை நடத்திவருகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பின்பாக ரம்ஜான் மாதத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் பங்கேற்றது மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரை மாநகர் முழுவதிலும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பேசுபொருளாகியுள்ளது.

மதுரை முழுவதும் போஸ்டர்

நடிகர் விஜய் கள்ளழகர் வேடமிட்டபடி தலையில் தலைப்பாகையுடன் உடல் முழுவதில் நாமும் பூசிய படி கையில் தண்ணீர் தொப்பரை வைத்தபடி உள்ள படத்துடன் பதிவிட்டு விவசாயிகளின் நிலை உந்தன் வருகையால் தளிரட்டும் என்ற வாசகத்தோடு தமிழ்நாட்டின் தளபதியே என்ற அடுக்கு மொழி வசனத்தோடு சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். அதில் ஒருபுறம் கள்ளழகர் போல நடிகர் விஜயை அலங்கரித்து மற்றொருபுறம் கிருஷ்ணர் படத்துடன் ஆயனே அழகனே என்ற வசனங்களை பதிவிட்டும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.