Kaantha Review : தியாகராஜ பாகவதராக கவர்ந்தாரா துல்கர் சல்மான்..? காந்தா திரைப்பட விமர்சனம் இதோ

1 month ago 2
ARTICLE AD

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் , ரானா டகுபதி , சமுத்திரகனி , பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ள படம் காந்தா. ஸ்டியோ கலாச்சாரத்தை மையமாக வைத்து பீரியட் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் நாளை அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பழம்பெரும் நடிகர் தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை கொஞ்சமும் 50 களில் நிகழ்ந்த வேறு சில நிகழ்வுகளை வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு லக்கி பாஸ்கர் படத்தில் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மான் காந்தா படத்தில் கவர்வாரா ? காந்தா படத்தை பார்த்து விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்

காந்தா திரைப்பட விமர்சனம்

நாயகனான டிகே மகாதேவனை (துல்கர் சல்மான்)  நடிக்க வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அவரை ஒரு பெரிய நடிகனாக்குகிறார் சமுத்திரகனி . ஆனால் புகழ் வளர வளர மகாதேவன் தனது குருவை மீறி சில முடிவுகளை எடுக்கிறார். சினிமாத் துறையில்  புகழ் , லட்சிய வெறி கொண்ட நாயகனுக்கும் அவனது குருவுக்கும் இடையில் ஏற்படும் மோதல் இப்படத்தின் முதல் பாதியில் சொல்லப்படுகிறது. இதனிடையில் நாயகி பாக்யஶ்ரீ போர்ஸ் உடன் நாயகனுக்கு காதல் உருவாகும் தருணங்கள். குரு சிஷ்யன் மோதலாக செல்லும் முதல் பாதியைத் தொடர்ந்து விறுவிறுப்பான கிரைம் த்ரில்லராக இரண்டாம் பாதியில் செல்கிறது. சிறப்பு விசாரணை அதிகாரியாக வந்து ரானா டகுபதி கதையில் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

துல்கர் சல்மான் நடிப்பு

டி ஆர் மகாதேவன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக இடவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு திறமைக்கு மிகப்பெரிய உதாரணம். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கலாம் என விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் நடிகர் சமுத்திரகனி தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்த்துள்ளார். இளம் நடிகை பாக்யஸ்ரி போர்ஸ் நிச்சயம் ஒரு சிறந்த நடிகையாக உருவாவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.

#Kaantha - ⭐️⭐️⭐️⭐️ This is a classic! #SelvamaniSelvaraj has made a genre bending film . While the first half is all about the ego tussle between the Guru -Sishya and romantic undercurrent between the film stars , the second half becomes a Hitchcock style investigative thriller… pic.twitter.com/5RptSL6ggE
— Rajasekar (@sekartweets) November 12, 2025

Read Entire Article