இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். காக்கி சர்கஸ் வெப் சீரிஸின் முழு விமர்சனம் இதோ

காக்கி சர்கஸ் விமர்சனம்

கண்ணகி ஆண்டாள்புரம் கிளைச் சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் முனீஸ்காந்த் (அன்பு செழியன்) கைதிகளை புத்தக வாசிப்பின் மூலம் மாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார். அதற்கு முற்றிலும் மாறாக, அவரது கீழ் பணிபுரியும் அர்ஜீன் ஒழுக்கம் என்றால் அடிதான் என்று நம்புபவர். இப்படியாக முரண்பட்ட மனப்பான்மைகள் மோதிக்கொண்டிருக்கும் அந்தச் சிறையில், ஊரின் கண்ணகி சிலை முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலிலிருந்து ஆண்டுதோறும் கோயில் விழாவுக்காக சேமிக்கப்படும் பணம் திடீரென காணாமல் போகிறது.

சாதாரண திருட்டாகத் தோன்றிய இந்த சம்பவம், சிறையையும் நகரத்தையும் கலக்கமடையச் செய்கிறது. புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஜெயிலரும், அளவுக்கு மீறிய உற்சாகமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் திருடனை கண்டுபிடிக்க களமிறங்க, அவர்களை விட ஒரு படி முன்னிலையிலேயே மர்ம நபர் தன் குழப்பங்களை ரசித்தபடி நகர்கிறான். இதே நேரத்தில், யூடியூப் உள்ளடக்கத்திற்காக இந்த வழக்கில் மூக்கை நுழைக்கும் ரமா, சிந்து போன்ற ஊர்மக்களும் அறியாமலே இந்த மர்மத்தின் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

குழந்தை, மணி உள்ளிட்ட கைதிகள் மீது சந்தேகம் மாறி மாறி விழ, ஒவ்வொரு தடயமும் புதிய திருப்பங்களை உருவாக்குகிறது. எளிய உண்டியல் திருட்டாகத் தொடங்கும் இந்த விசாரணை  காதல், ஏமாற்றம், மறைக்கப்பட்ட ரகசியங்கள் என பரபரப்பும் நகைச்சுவையுமாக தொடர்கிறது இந்த தொடர். ஒவ்வொரு அத்தியாயமும் புதிய பழைய முடிச்சுகளை அவிழ்த்து புதிய முடிச்சுகளை போட்டு கடைசி எபிசோட் வரை சுவாரஸ்யம் குலையாமல் நகர்கிறது

ஜெயிலராக நடித்துள்ள முனிஷ்காந்தின் கதாபாத்திரம் தொடங்கி சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா இந்த தொடரில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் இந்த கதையுலகிற்குள் நன்றாக பொருதியிருக்கிறார்கள். கதை மிக நிதானமாக சொல்லப்பட்டிருப்பது போர் அடிப்பதாக தோன்றலாம் ஆனால் கதை முழுமையடையும் போது ஒரு நல்ல அனுபவத்தை வழங்குகிறது காக்கி சர்கஸ் தொடர்.