KA Sengottaiyan: எடப்பாடியில் தவெக வெற்றி விழா.. செங்கோட்டையன் எடுத்த முடிவு.. இபிஎஸ் ஷாக்!

2 hours ago 1
ARTICLE AD

துரோகத்தின் மொத்த உருவமாக எடப்பாடி பழனிசாமி இருந்துக் கொண்டு என்னை துரோகி என சொல்கிறார் என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ளது. அந்த கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நான் துரோகம் செய்து விட்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னார். என்ன துரோகம் செய்து விட்டேன்?. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கியது துரோகமா அல்லது பொதுச்செயலாளராக்கியது துரோகமா, எதை சொல்கிறார். இரண்டாவதாக பாஜகவில் இருக்கும் அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்கினால்  மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என சொன்னார். சசிகலாவை துரோகி என சொன்னார். ஜெயிலில் இருந்து வரும்போது என்ன உதவியும் செய்யக்கூடாது என சொன்னார்.

15 நாட்கள் சசிகலாவுக்கு பரோல் கொடுத்தபோது 5 நாட்களில் முடிக்க வேண்டும் என சொன்னார். டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கினார், ஓபிஎஸை நீக்கினார். பாஜக அவ்வளவு உதவி செய்த நிலையில் 2024ல் கூட்டணி இல்லை என சொல்லி விட்டார். பிரேமலதாவுக்கு ராஜ்ய சபா எம்பி குடுக்காமல் இருந்ததால் அவரும் கூட்டணி இல்லை என சென்று விட்டார். ஆக, துரோகத்தின் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிசாமி.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் நாங்கள் குறிக்கோளுடன் இருக்கிறோம். திமுக இனி தமிழ்நாட்டில் தலைதூக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். இருந்தாலும் ஒரு மனித நேயம் தேர்தல் களத்திலும் வேண்டும். உதயநிதி, மு.க.ஸ்டாலின் பற்றிய கருத்து தேவையற்றது. தேர்தல் களத்தில் வென்று காட்ட வேண்டும். கோழைத்தனம், பொறாமைத்தனம் இருக்கக்கூடாது. இன்றைக்கு நம்மை பொறுத்தவரை திமுகவை வீழ்த்தும் சக்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது. அவர் ஏகப்பட்ட திட்டங்கள் அறிவித்துள்ளார்.

விவசாயிகள், ஏழை மக்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, நெசவாளர்களுக்கு என ஏகப்பட்ட திட்டங்கள் அறிவித்துள்ளார். இயற்கையே நமக்கு கொடுத்துள்ள கொடை தான் விஜய். அவரை வெல்ல இனிமேல் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் சரித்திரம் அமையப் போகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார். அடுத்த முதலமைச்சராக விஜயை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கோபி செட்டிப்பாளையம் வந்தார். என்னை துரோகி என்றார். அவரை வீழ்த்தி இங்கு வெற்றி விழா நடத்துவேன் என சொன்னார். நான் போய் எடப்பாடியில் வெற்றி விழா நடத்தப்போகிறேன் பாருங்கள்” என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article