Jothimani: விஜய் பேசுவது சரியல்ல.. காங்கிரஸ் பற்றிய விமர்சனத்துக்கு ஜோதிமணி பதிலடி!

3 days ago 2
ARTICLE AD

தேர்தலுக்கு பின்பு தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் வாக்காக மாறுவார்களா என்பது தெரியும் என கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில் இம்முறை தமிழக அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா-ராமதாஸ் கூட்டணி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய தமிழகம் கட்சி என பலமுனை போட்டியால் எதிர்பார்ப்பை எகிறியுள்ளது.

விஜய்கான கூட்டம் ஓட்டாக மாறுமா?

இந்த நிலையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தூத்துக்குடியில் கூடிய கூட்டத்தைப் பார்த்தீர்களா?, இவ்வளவு கூட்டம் கூடியதைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோதிமணி, ”விஜய் புதிதாக கட்சி தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் ஒரு பிரபலமாக இருக்கிறார். அதனால் இயல்பாக அவருக்கு கூட்டம் கூடியிருக்கிறது என நான் நினைக்கிறேன். நிறைய இளைஞர்கள் மத்தியில் விஜய் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். ஆனால் சினிமாவில் அவர் அடைந்த வெற்றி, புகழ் தேர்தலில் வாக்காக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தல் என்பது ஒரு களப்பணி. திமுக மற்றும் அதிமுக கூட்டணி கடுமையான தேர்தல் பரப்புரையில் இருக்கிறது. தவெக வேட்பாளர்கள் தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது. சின்னம், கொடி, பேனர், நோட்டீஸ் என எந்த விஷயமும் இல்லாமல் இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் வாக்காக மாறுவார்களா என்பது தேர்தலுக்கு பின்பு தான் தெரியும்” என தெரிவித்தார்.

விஜய் பேசுவது சரியல்ல

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுகவிடம் விலை போய்விட்டதாக விஜய் விமர்சனம் வைப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, “காங்கிரஸ் கட்சி 130 ஆண்டுகள் பழமையானது. நேர்மைக்கும், உண்மைக்கும் பெயர் போனது. ராகுல்காந்தி போன்ற கொள்கை பிடிப்புள்ள, நேர்மையான மற்றும் மகத்தான தலைவரால் வழிநடத்தப்படுகிற கட்சியாகும். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி பற்றி எடுத்தோம், கவிழ்த்தோம் என விஜய் பேசுவது சரியில்லை. அது அனுபமில்லாத தலைமை பண்பாக தான் பார்க்கிறேன்” என கூறினார்.

வாக்குகளை பிரிக்க மாட்டார்

அடுத்ததாக விஜயின் வருகையால் திமுக கூட்டணி ஓட்டு பிரியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகள் என்பது ஒரு நல்லாட்சி, சிறப்பான முதலமைச்சர் இரண்டாவது முறையாக வர வேண்டும் என்ற அடிப்படையிலும், வலுவான கூட்டணிக்கு, ராகுல்காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இருப்பதாலும், அதிமுக, பாஜகவுக்கு எதிராக கிடைப்பது, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்துள்ள குறைந்தப்பட்சம் 2,3 திமுக அரசின் திட்டங்கள் மூலம் வருவது ஆகியவை அடங்கும். அதனால் விஜய் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை பிரிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை" என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Read Entire Article