தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் மிகவும் முக்கியமான கோயில் வடபழனி முருகன் கோயில். சென்னையில் உள்ள இந்த கோயில் மிகவும் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வடபழனி முருகன் கோயிலில் கிளெர்க், அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

கிளெர்க் - 1

அலுவலக உதவியாளர் - 1

மடப்பள்ளி - 1

காவலர் - 1

திருவலகு - 1

என்னென்ன தகுதிகள்?

கிளெர்க்:

கிளெர்க் பணிக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதி 10ம் வகுப்பு ஆகும். இந்த பணிக்கு ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர்:

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூபாய் 11 ஆயிரத்து 600 முதல் ரூபாய் 36 ஆயிரத்து 800 வரை ஊதியமாக வழங்கப்படும்.

மடப்பள்ளி:

மடப்பள்ளி என்பது கோயில் பிரசாதம் செய்யும் அறை ஆகும். இதற்கு கோயில் பிரசாதம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் தமிழ் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூபாய் 11 ஆயிரத்து 600 முதல் ரூபாய் 36 ஆயிரத்து 800 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

காவலர்:

வாட்ச்மேன் எனப்படும் காவலர் பணிக்கு தமிழ் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ரூபாய் 11 ஆயிரத்து 600 முதல் ரூ.36 ஆயிரத்து 800 வரை ஊதியமாக வழங்கப்படும்.

திருவலகு:

கோயிலைத் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர் பணியே திருவலகு என்று அழைக்கப்படுகிறது. இந்த பணிக்கு தமிழ் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூபாய் 11,600 ஆயிரம் முதல் 36 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடவில்லை.

இந்த பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜுலை 19ம் தேதி ஆகும்.