விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் (University College of Engineering Villupuram) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் (CSE) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விவரங்கள் இதோ:

விழுப்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் (DEPARTMENT OF COMPUTER SCIENCE AND ENGINEERING) திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2026

Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E / B.Tech in Computer Science and Engineering / Information Technology / Electronics and Communication Engineering (or) BCA / B.Sc (Computer Science) / MS (CSE/ IT) / M.Sc (Computer Science) / MCA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/CMRG251058_Project_Assistant_Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Dr. P.Arjun, Assistant Professor (Sl. Gr.), Department of Computer Science and Engineering, University College of Engineering Villupuram - 605 103

மின்னஞ்சல் முகவரி:
[email protected]

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2026

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தகுதியான பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.