JOB FAIR: "வேலை வேண்டுமா" - இதோ.... வாய்ப்பை தவறவிடாதீர்கள்....!

1 year ago 7
ARTICLE AD

மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து தனியார் நிறுவனங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20-ம் தேதி நடந்த உள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து மயிலாடுதுறையில் உள்ள யூனியன் கிளப்பில் 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்ட உள்ளது.

NEET Exam Online: இனி கணினி முறையில் நீட் தேர்வு? மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!

500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்

இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக 500-க்கு மேற்ப்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

முகாமில் கலந்துகொள்ள தகுதிகள்

மேலும் இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளரை கைது செய்ய இடைக்காலத் தடை! - நீதிபதி விதித்த நிபந்தனை

முகாமிற்கு எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்

எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறவும், மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளுர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

R Ashwin: "முரளிதரனுக்கு அடுத்து அஸ்வின்தான்" கிரிக்கெட்டை கட்டியாண்ட மாயாஜால சுழல் சக்கரவர்த்தி!

மேலும் விவரங்களுக்கு தொடர் எண்

எனவே தனியார்துறை நிறுவனங்களில் வேலைதேடும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Read Entire Article