ஜே.இ.இ. மெயின் 2026 அமர்வு இரண்டு தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது பயணம் மற்றும் தங்குமிடங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வசதியாக, தேர்வு மைய நகர விவரச் சீட்டை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கான இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது என்பதை ஜே.இ.இ மெயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்த நகர விவரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிட்டு இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.

இந்த நகர விவரச் சீட்டு, தேர்வுக்கான அதிகாரப்பூர்வ நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) அல்ல என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தேர்வு நடைபெறும் நகரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஒரு வசதி மட்டுமே. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, தேர்வு தொடங்குவதற்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு முன்னதாக, தனியாக வெளியிடப்படும்.

தேர்வு எப்போது?

ஜே.இ.இ. மெயின் 2026 அமர்வு இரண்டு தேர்வுகள், வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பான விவரங்களை இந்த இணைப்பில் காணலாம். https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2026/03/202603211564081245.pdf

தேர்வு மைய விவரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஜே.இ.இ. மெயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://jeemain.nta.nic.in/-க்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஜே.இ.இ மெயின் 2026 அமர்வு இரண்டு தேர்வு நகர விவரச் சீட்டுக்கான இணைப்பைச் சொடுக்கவும்.

இப்போது தோன்றும் புதிய பக்கத்தில், உங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு குறியீட்டைச் சரியாக உள்ளிடவும்.

சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தியதும், உங்களுக்கான தேர்வு நகர விவரச் சீட்டு திரையில் தோன்றும்.

அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, அதைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலத் தேவைக்காக ஒரு அச்சு நகல் எடுத்துக் கொள்ளவும்.

இந்தச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் இருந்தால், விண்ணப்பதாரர்கள் தேசிய தேர்வு முகமையின் உதவி மைய எண்ணையோ அல்லது மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://jeemain.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து பார்க்கவும்.