என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வு முகமை ஜேஇஇ மெயின் 2026 தேர்வுகளுக்கான மதிப்பெண் அட்டையை தற்போது டிஜிலாக்கர் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) சேர்தற்கான முதற்கட்டத் தேர்வான ஜேஇஇ மெயின் 2026-ன் அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டையைத் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் இணையதளம் அல்லது செயலி மூலமாகப் பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

மாணவர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களது மதிப்பெண் அட்டையைப் பெறலாம்:

முதலில் டிஜிலாக்கரின் அதிகாரப்பூர்வ இணையதளமான digilocker.gov.in பக்கத்திற்குச் செல்லவும் அல்லது அதன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால், கணக்கைத் தொடங்கி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள 'Issued Documents' என்ற பகுதிக்குச் செல்லவும்.

தேடுதல் பகுதியில் 'JEE Main 2026 Scorecard' அல்லது 'National Testing Agency' என்று தட்டச்சு செய்யவும்.

அங்கு ஜேஇஇ மெயின் அமர்வு 2 அல்லது குறிப்பிட்ட ஆண்டைத் தேர்வு செய்யவும்.

தேவையான விவரங்களான விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுச் சமர்ப்பிக்கவும்.

திரையில் தோன்றும் மதிப்பெண் அட்டையைச் சரிபார்த்து, எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

மதிப்பெண் அட்டையில் என்ன இருக்கும்?

இந்த மதிப்பெண் அட்டையில் மாணவர்களின் பாடவாரியான சதவீத மதிப்பெண்கள் (Percentile), அகில இந்திய தரவரிசை (AIR) மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்களா என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், JoSAA கலந்தாய்வு ஜூன் 2-ம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிலாக்கர் மூலம் பெறப்படும் இந்த டிஜிட்டல் ஆவணம் அசல் ஆவணத்திற்கு இணையானதாக அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.