Jay Shah Salary:ஐசிசி தலைவர் ஜெய்ஷாவின் சம்பளம் எவ்வளவு? சலுகைகள் என்ன?

1 year ago 8
ARTICLE AD

ஐசிசி புதிய தலைவர்:

பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐசிசி தலைவராக அறிவிக்கப்பட்டார். அந்தவகையில் வரும் டிசம்பர் மாதம் ஐசிசியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார் ஜெய்ஷா. இதற்கு முன்னர் நான்கு இந்தியர்கள் ஐசிசி தலைவர் பதவியை அலங்கரித்து இருந்தாலும் ஜெய்ஷா இளம் வயதிலேயே அந்த பதவியை பெற்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது  தொடர்பான தகவல்களை பார்ப்போம்;

ஜெய்ஷாவின் சம்பளம் எவ்வளவு??

ஐசிசியில் கௌரவ பதவிகளில் இருப்பவர்களுக்கு நிலையான சம்பளம் கிடையாது. மாறாக அவர்களின் பயணம், ஆலோசனைக் கூட்டங்கள் போன்றவற்றிற்கான கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளுக்கான தொகை வழங்கப்படுகிறது. இருப்பினும், பயணம், ஆலோசனைக் கூட்டங்கள் அல்லது பிற வசதிகளுக்காக ஐசிசி அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்குகிறது என்பதை இதுநாள் வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிசிசிஐயின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளும் கவுரவ ரீதியிலான பதவிகளாகும்.

அந்த பதவிகளுக்கு நிலையான சம்பளம் என்பது கிடையாது. அதேநேரம் கொடுப்பனவுகள், பயணப் படி உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆலோசனைக் கூட்டம், பொது நிகழ்ச்சிகள் என அவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தனியாக பயணப் படி, கொடுப்பனவு உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்கள் மேற்கொள்ளும் செலவுகளை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்கிறது. ஐசிசி கூட்டங்களில் கலந்து கொள்ள அவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது அதற்கு உண்டாகும் செலவுகளுக்கு ஒவ்வொரு நாளும்  84,000 ரூபாய் வழங்கப்படும்.

Read Entire Article