<p>பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது ஜனநாயகன். விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் ஆக்‌ஷன் , செண்டிமெண்ட் , அரசியல் என பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரியளவில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலும் ரிலீஸூக்கு முன்பே தெரியவந்துள்ளது.</p>
<h2>ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி</h2>
<p>ஜனநாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ 121 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/actor-prabhas-responds-to-why-he-did-not-marry-244886" width="631" height="381" scrolling="no"></iframe></p>