JanaNayagan Censor : ஜனநாயகன் ரிலீஸில் சிக்கல்.. சென்சார் சர்ச்சையில் தீர்ப்பு ஒத்திவைப்பு

3 months ago 8
ARTICLE AD

விஜயின் ஜனநாயகன் படத்தை வெளியிட மத்திய தணிக்கை வாரியம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தணிக்கை குழு பரிந்துரைத்த காட்சிகளை நீக்கியபின்னும் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பும் உரிமை தணிக்கை தலைவருக்கு இருப்பதாக நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாக இருந்தது. இப்படியான நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியத்திற்கும் படக்குழுவிடையேயும் சர்ச்சை எழுந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இருந்து ஆட்சேபனத்திற்குரிய வசனங்கள் மற்றும் காட்சிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த காட்சிகளை நீக்கினால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குவதாக தணிக்கை வாரியம் தெரிவித்திருந்தது . தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை செய்தபின்னும் படத்திற்கு தணிக்கை சாண்றிதழ் வழங்காமல் மறுதணிக்கைக்கு அனுப்பும்படி இழுத்தடித்து வந்தது தணிக்கை வாரியம்.

இதனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி பிடி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது

தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் கேள்வி

தணிக்கை ஆய்வுக் குழு சொன்ன திருத்தங்களை செய்தபின்னரும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது ஏன் என நீதிபதி தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பினார். மேலும் U/A சான்றிதழ் வழங்குவதாக கூறி படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்

ஜனநாயகன் படத்தில் ஆலோசனை இன்றி பாதுகாப்பு படையினர் சின்னங்கள் பயண்படுத்தப்பட்டிருப்பதாக தணிக்கை வாரியம் குற்றம்சாட்டியது. மேலும் தணிக்கை குழுவின் ஆய்வில் திருப்தி இல்லாவிட்டால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தணிக்கை தலைவருக்கு உரிமை உள்ளது என கூறியது. ஒரு படத்தை தணிக்கை செய்ய 15 நாட்கள்  தேவைப்படும் . ஜனநாயகன் படத்தை தணிக்கை செய்ய 4 வாரம் அவகாசம் தேவைப்படும் . நாளை மறுநாள் படம் ரிலீஸ் என்று சொல்லி  தணிக்கை சான்றிதழ் கேட்க முடியாது என மத்திய அரசு சார்பாக வாதாடப்பட்டது.

நாளை தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்துள்ளார். தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

Read Entire Article