Jana Nayagan: "மோடிதான் ஜனநாயகன்.." விமர்சனங்களுக்கு பரபரப்பு பதில் தந்த தமிழிசை!

3 months ago 8
ARTICLE AD

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். பிரபலமான நடிகரான இவர் அரசியல் வருகைக்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், இவர் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் காரணமாக படம் வெளியாவது தாமதமாகியுள்ளது.

தாமதம் ஆகும் ஜனநாயகன்:

ஜனநாயகனுக்கு தணிக்கைச் சான்றிதழ் தராமல் தாமதம் செய்வதால் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள், திரை பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மோடிதான் ஜனநாயகன்:

"இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர்தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த தொடர்பும் இல்லை:

நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட் க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின்போது, கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும்… pic.twitter.com/EgvgRGU3LH
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) January 8, 2026

சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்:

திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் இளங்கோவன், திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்கிறார்.

அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

நாங்களும் எதிர்பார்க்கிறோம்:

விஜய்  அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை, நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article