Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?

3 months ago 8
ARTICLE AD

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் ஈடுபடுவதால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து, இவரது நடிப்பில் கோட் படம் வெளியான பிறகு, இவரது கடைசி படம் ஜனநாயகன் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகன் தணிக்கை சான்று?

ஜனவரி 9ம் தேதியான நாளை உலகெங்கும் ஜனநாயகன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்திற்கான தணிக்கைச் சான்று பெறுவதில் பெரும் சிக்கல் உருவாகியது. திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழு இதுவரை சான்றிதழ் வழங்காததால் ஜனநாயகன் நாளை வெளியாவது இதுவரை உறுதியாகவில்லை.

நாளை தீர்ப்பு:

ரிலீசிற்கு கடைசி கட்டத்தில் தணிக்கைச் சான்று வழங்காத நிலையில், படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்த நிலையில், ஜனநாயகன் வெளியாகுமா? வெளியாகதா? என்பதற்கான தீர்ப்பை ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஜனவரி 9ம் தேதியான நாளை காலை 10.30 மணிக்கு இந்த தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பை நீதிபதி பிடி ஆஷா வழங்குகிறார். இந்த தீர்ப்பிற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தின் மீது புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தணிக்கை குழு கூறியிருந்தது. படம் தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் தாக்கல் செய்திருந்தனர்.

வாதங்கள் என்னென்ன?

இந்த படத்தில் மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆய்வு செய்த குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையிலே மறு ஆய்வுக்கு அனுப்பியதாக தணிக்கை குழு தெரிவித்தது. மறு ஆய்வுக்கு அனுப்பியது தொடர்பாக தயாரிப்பு குழுவிற்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், இதில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என்றும் தணிக்கை குழு அறிவித்தது.

பட தயாரிப்பு நிறுவனம் 5 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர் மட்டுமே ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மற்றவர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க முன்வந்தனர். இதனால், அதன் அடிப்படையில் இந்த பட சான்றிதழை வழங்க முன்வர வேண்டும் என்று முன்வைத்துள்ளனர்.

ஆவலுடன் ரசிகர்கள்:

ஜனநாயகன் படம் நாளை ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற பெரிய எதிர்பார்ப்புடன் விஜய்யின் ரசிகர்கள் உள்ளனர். இந்த விவகாரத்தில் விஜய்க்கு ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரகாஷ், பிரியாமணி, நரைன், நாசர், சுனில் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சுமார் 380 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article