Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

2 days ago 1
ARTICLE AD

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துள்ளார்.

ஜனநாயகன் படம் ரிலீஸ்

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜயின் கடைசிப் படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதாலும், விஜய் தேர்தலில் போட்டியிடுவதாலும் விதிகள் காரணமாக ரிலீஸ் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஜனநாயகன் படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உடனடியாக இப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

திமுக - பாஜக மீது மாறி மாறி குற்றச்சாட்டு

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் அவரது பெயரை கெடுக்கும் வண்ணம் திமுக மற்றும் பாஜக கூட்டுசதி செய்து ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு விட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா சரமாரியாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை துறையும் விளக்கம் கொடுத்துள்ளது. படம் பார்க்க வேண்டும் என்றாலும் அதற்கான பாஸ்வேர்ட் பட தயாரிப்பு நிறுவனத்திடம் தான் இருக்கும். மார்ச் 17ம் தேதியே அவை அனைத்தும் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் பட நிறுவனம் புகார் அளித்துள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்தவர்கள், அதனை பகிர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கொடுத்த நச் பதில்

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஜனநாயகன் படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அதைப் பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் என ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. ஆதவ் அர்ஜூனா நியூஸ் எல்லாம் நான் படிப்பதில்லை” பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்தியில் இருப்பதால் திமுக தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பி வருகிறார்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read Entire Article