Jana Nayagan Salary: "விஜய் முதல் பாபி தியோல் வரை.. ஜனநாயகனில் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

3 months ago 8
ARTICLE AD

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு இவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள இவரது கடைசி படம் ஜனநாயகன்.

சம்பளம் எவ்வளவு?

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 9ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் யார், யாருக்கு எவ்வளவு சம்பளம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

விஜய் - 220 கோடி ரூபாய்

எச்.வினோத் - 25 கோடி ரூபாய்

அனிருத் - 13 கோடி ரூபாய்

பூஜா ஹெக்டே - 3 கோடி ரூபாய்

பாபி தியோல் - 3 கோடி ரூபாய்

மமிதா பைஜு - 60 லட்சம் ரூபாய்

மொத்த பட்ஜெட் 380 கோடி:

இந்த படத்தில் படத்தின் தயாரிப்பு செலவுக்காக ரூபாய் 80 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் ஊதியம் உள்ளிட்டவை அனைத்தும் சேர்த்து இந்த படத்திற்கு ரூபாய் 380.6 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்திற்கு நிகராக வியாபாரம் கொண்டுள்ள நடிகராக திகழ்பவர் விஜய். வழக்கமாவே விஜய்யின் கடந்த சில படங்கள் கதை ரீதியாக வெற்றி, தோல்வி மாறுபட்டாலும், வர்த்தக ரீதியாகவே படம் வெளியாவதற்கு முன்பாகவே சாட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ், ஓடிடி ரைட்ஸ் ஆகியவற்றின் மூலமாக வசூலை குவித்து விடுகிறது.

விஜய்யின் சம்பளம்:

இந்த படம் கடைசி படம் என்பதால் அவர் இந்த படத்திற்கு ரூபாய் 220 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார்.  சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான எச்.வினோத் இந்த படத்திற்கு ரூபாய் 25 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார்.

இவர் கடைசியாக அஜித்தை வைத்து இயக்கிய துணிவு படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் என்பதாலும், விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்ற வகையிலும் திரைக்கதை மாற்றி அமைத்ததாலும்  இவருக்கு இந்தளவு ஊதியம் என்று கூறப்படுகிறது. படத்தின் மற்ற பிரபலங்களான கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரின் ஊதிய விவரங்கள் வெளியாகவில்லை.

148 நாட்கள் ஷுட்டிங்:

ஜனநாயகன் படம் மொத்தம் 148 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் படத்தின் செட்டிற்காக மட்டும் ரூபாய் 15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் வேலைக்காக ரூபாய் 5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஊதியமாக மட்டும் ரூபாய் 272. 6 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதரவு செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூபாய் 380.6 கோடி படத்திற்கு பட்ஜெட் செலவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

வசூல் குவிக்குமா?

வழக்கமாகவே விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பொங்கல் விடுமுறையும் என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் ரசிகர்கள் கூட்டம் குவியும் என்பதில் சந்தேகம் இ்ல்லை.

மேலும், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடி உரிமம், இசை வெளியீட்டு ஒளிபரப்பு உரிமை, சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை உள்ளிட்ட பலவற்றின் மூலமாக ஏற்கனவே படத்தின் பட்ஜெட்டை வசூலாக குவித்துவிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article