James Vasanthan: கார் கண்ணாடியை தவெக உடைக்கல.. தப்பா சொல்லிட்டேன்.. ஜேம்ஸ் வசந்தன் ஒப்புதல்!

1 month ago 6
ARTICLE AD

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற இடத்தில் தன்னுடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கமாக அளித்துள்ளார்.

கார் கண்ணாடி உடைப்பு

தமிழ் சினிமாவில் சில படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களிடத்தில் ஜேம்ஸ் வசந்தன் நன்கு பரீட்சையமானவர். இவர் சில தினங்களுக்கு முன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு அவர் உணவருந்த சென்ற நிலையில்  காரின் கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்த பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதில், தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை என பதிவிட்டிருந்தார்.

தற்குறி என ஜேம்ஸ் வசந்தன் தமிழக வெற்றிக் கழகத்தினரை குறிப்பிட்டிருந்தார். சமீபகாலமாக விஜய், தவெக கட்சியின் செயல்பாடுகளை மிக மோசமாக அவர் விமர்சித்து வந்ததால் இது நடந்திருக்கலாம் என சந்தேகித்திருந்தார். ஆனால் உண்மையில் நடந்ததே வேறு என ஜேம்ஸ் வசந்தன் ஒப்புக்கொண்டுள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன?

அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், “என்னுடைய இரு மதிப்பீட்டுப் பிழைகளை' நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அந்த இடம் நீல நிற தகரத் தட்டிகள் அடித்திருந்ததால் அது காலி மனை, அல்லது கட்டுமானப் பணி நடக்கிற இடம் என்று நினைத்து அங்கு காரை நிறுத்தினோம்.

சம்பவம் நடந்தது ஞாயிற்றுக்கிழமை. உச்சி வெயில் நேரம். சுற்றுவட்டாரத்தில் யாரும் காணப்படவில்லை. வெளியே இருந்து பார்க்கையில் அது திறந்த வெளியாக காலியாகத்தான் தெரிந்தது.இன்றைய விசாரணைக்குப் பிறகுதான் அதற்குள் தொலைவில் உள்ளே ஒரு குடித்தனம் இருந்தது தெரியவந்திருக்கிறது.

அவர்களுக்கும் இந்த உணவகத்துக்கும் நீண்ட பகை இருந்திருக்கிறது. அதன் நேற்றைய பலி நான். காரை எடுத்துக்கொண்டு கிளம்பி சற்று நேரம் கழித்துதான் கண்ணாடி உடைந்திருக்கிறது என்பதை நாங்கள் கவனித்தோம். ஏதோ ஒருவித சலசல சத்தம் கேட்டுக்கொண்டே வருகிறது.

தற்செயலாக திரும்பிப் பார்த்தால் கண்ணாடி சில்லு சில்லாக உள்ளே விழுந்துகொண்டே வருகிறது. என் மனைவிதான் முதலில் கவனித்தார்.

வெயிலின் உக்கிரம் தாங்காமல் உடைந்திருக்கும் என்றார். சூட்டில் வெடித்தால் இப்படி உடையாது. இது ஒரு புள்ளித் தாக்குதல். உடைக்கப்பட்டிருக்கிறது என்றேன்.

உடனே என்ன எண்ணம் வரும்? முந்தைய நாள்தான் தவெகவினர் உச்சக்கட்ட கோபத்தில் கெட்டகெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்த்திருக்கின்றனர். அவர்களில் யாரோ செய்திருக்கக்கூடும் என்ற எண்ணம் வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் வீடியோ எடுத்தேன்.

காவல்துறைக்குப் புகார் கொடுக்கலாமா என்று ஆலோசித்தோம். சின்ன விஷயம்தானே, வேண்டாம், விட்டுவிடலாம் என முடிவுசெய்தோம். ஆனால் இதைப்போல சில நிகழ்வுகளில் நாங்கள் புகார்கொடுக்காமல் போனதால் பல சங்கடங்களை பல ஆண்டுகள் அனுபவித்திருக்கிறோம் என்பதை என் மனைவிக்கு நினைவூட்டினேன். அவர் யோசிப்போம். தேவைப்பட்டால் கொடுப்போம் என்று சொன்னார்.

ஒரு தகவலாகவாவது இதைப் பதிவுசெய்து வைத்தால் பின்னர் உதவலாம் என்று நான் பேஸ்புக்கில் பகிர்ந்தேன். இது என் மனைவிக்குத் தெரியாது. அவர் சமூக ஊடகங்களில் இல்லை. இங்கே என்னுடைய மதிப்பீட்டுப் பிழை, அந்தக் குறிப்பிட்ட சொல்லைப் (தற்குறி) பயன்படுத்தியது.

நான் ஊடகங்களில் சொற்களில் மிக எச்சரிக்கையாக இருப்பேன். சொல் தேர்வுகளில் மிகக் கவனமாக இருப்பேன். ஆனால், இப்படி கண்ணாடி உடைந்தது என் உணர்வை சற்று சலனப்படுத்தியதில் இந்தப் பிழையைச் செய்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன்.

இத்தனை ஆண்டு ஊடக அனுபவம் இருந்தும் இந்தப் பிழையை நான் செய்தது எனக்கு மிகப்பெரிய உறுத்தலைக் கொடுத்திருக்கிறது.

அந்த ‘ஒரு’ சொல்தான் இந்த உணர்வுபூர்வமான தேர்தல் நேரத்தில் எல்லாருடைய கூடுதல் கவனத்தை ஈர்த்து, இதற்கு அரசியல் கோணத்தைக் கொடுத்து இப்படிப் பூதாகாரமாக்கி விட்டது.

பலருடைய நேரத்தையும், உணர்வுகளையும் பாதித்துவிட்டது. இது எனக்கு அளவுகடந்த வேதனையைக் கொடுத்திருக்கிறது. நானா இப்படி கவனக்குறைவாக இருந்திருக்கிறேன் என்பது என்னைச் சுண்டிக்கொண்டே இருக்கிறது! வருந்துகிறேன்!வாழ்க்கையின் அனுபவப் பாடங்களுக்கு முடிவே இல்லை என்று மீண்டுமொரு முறை உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Read Entire Article