<p>ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது இந்தியா. இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் அபாரமாக தொடக்கம் அளித்தனர். </p>
<p>இருவரும் இணைந்து நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 172 ரன்களுக்கு இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சை முடித்தனர். ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் நிதானமான தொடக்கம் அளித்தனர். நேற்று 90 ரன்களுடன் களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ஜெய்ஸ்வால் ஹேசில்வுட் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். </p>