ஜெயிலர் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் படத்தின் ஓடிடி ரைட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அமேசான் பிரைம் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக , இவ்வளவு அதிக தொகைக்கு ஒரு தமிழ் திரைப்படம் விற்பனையாவது இதுவே முதல்முறை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் , மோகன்லா , ஷிவராஜ்குமார் , மிர்னா ஆகியோர் இப்படத்திலும் நடிக்கிறார்கள். தவிர எஸ்.ஜே சூர்யா , விஜய் சேதுபதி , வித்யா பாலன் , பாலையா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளார்கள். தற்போது சண்டிகரில் ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில காட்சிகள் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் படதயாரிப்பு நிறுவனத்தின் துரிதமான முயற்சியால் இந்த காட்சிகள் வைரலாவதை தவிர்க்கமுடிந்தது.

ஓடிடி விற்பனையில் சாதனை

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் படத்தின் ஓடிடி ரிலீஸ் விற்பனையாகியுள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் இப்படத்தை ரூ160 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ஒரு தமிழ் படத்திற்கு அதிகபட்சமாக கொடுக்கப்பட்ட விலை 120 கோடி . முதல்முறையாக ஒரு தமிழ் படத்தின் ஓடிடி ரைட்ஸ் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் இது ஜெயிலர் 2 படத்தின் மீது பான் இந்திய அளவில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களை லை அப் இல் வைத்துள்ளார். அந்த வகையில் ஜெயிலர் 2 , தலைவர் 173 மற்றும் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தலைவர் 173 படத்தை முன்னதாக சிபி சக்கரவர்த்தி இயக்கவிருந்த நிலையில் தற்போது இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்ட்மு நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் ரஜினி