தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் ஐ.டி.ஐ. பயிர்சி நிலையங்களில் 2024-2025 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் (மே) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இன்று (07.06.2024) விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் (II) பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் வியாழக்கிழமை (13.06.2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு சார்பில் 102 நிலையங்கள், 305 தனியார் நிலையங்கள் உள்ளன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skiltraining.In.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஐயம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் அலைபேசி எண்‌ மற்றும்‌ whatsapp எண்‌: 9499055689

[email protected] - என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வாசிக்க..

IIT Madras Free Training: பிசிஏ, பிஎஸ்சி மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்; ஐஐடி சென்னை அசத்தல்!