ஸ்பேடக்ஸ் திட்டம், என்பது விண்வெளியில் தனித்தனியே சுற்றி வரும் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் திட்டமாகும். உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில் ,நான்காவது நாடாக அந்த சாதனையை படைக்கும் முயற்சியில் இன்னும் சில மணி நேரங்களில் படைக்கும் என இந்தியர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

As we eagerly await the docking, watch this short video to learn more about the groundbreaking SpaDeX mission. Stay tuned for updates!

🚀✨ #SpaDeX #ISRO pic.twitter.com/MAEMar37Q7

— ISRO (@isro) January 1, 2025

விண்கலம் ஏ (SDX01) மற்றும் விண்கலம் B (SDX02) ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு, 15 நிமிட பயணத்திற்குப் பிறகு பூமிக்கு மேலே 475 கிமீ தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து PSLV-C60 ராக்கெட் மூலமாக, ஸ்பேஸ் டாக்கிங் சோதனைக்காக இரண்டு செயற்கைகோள்களை, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு விண்ணில் செலுத்தியது. புவியீர்ப்பு விசை குறைவாக உள்ள இடமான விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்யும் சோதனையில் அடங்கும். இந்த திட்டமானது, தட்டை பயிறை கொண்டு இலைகளை முளைக்க வைத்து வெற்றியை படைத்தது இஸ்ரோ.

மேலும், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் போற்றப்படும் SpaDeX பணியானது, ஸ்பேஸ் டாக்கிங், மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றில் நாட்டின் திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன; இதற்கு SpaDeX முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விண்ணில் உள்ள பல நூறு கி.மீ தொலைவில் உள்ள இரண்டு செயற்கைக்கோள்களை , இணைக்க , தற்போது 3 மீ தொலைவு வரை அருகில் கொண்டு வந்து, பின்னர் சற்று பின் தூரம் சென்று சோதனை நடத்தியுள்ளது.

SpaDeX Docking Update:

A trial attempt to reach up to 15 m and further to 3 m is done.

Moving back spacecrafts to safe distance

The docking process will be done after analysing data further.

Stay tuned for updates.#SpaDeX #ISRO

— ISRO (@isro) January 12, 2025

இந்த தருணத்தில் , உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் , இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியானது, சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இஸ்ரோ அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.