இன்றைய காலகட்டத்தில், உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவது எளிதான காரியமல்ல. தட்கல் டிக்கெட்டுகளில் கூட மக்களால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெற முடியவில்லை. குறிப்பாக பல விவரங்களை நிரப்புவதால் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இது நிகழ்கிறது. IRCTC வலைதளம் டிக்கெட் புக்கிங்கை எளிதாக்க மக்களுக்கு பல வசதியை வழங்குகிறது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலிருந்து டிக்கெட்டுகளை ரத்து செய்வது, PNR நிலையைச் சரிபார்ப்பது வரை IRCTC இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.

IRCTC அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதியில், AI உதவியுடன் எதையும் டைப் செய்யாமல், குரல் கட்டளை வழங்குவதன் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைப் பெற இயலும். IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலியைத் திறந்து, இந்த புதிய சாட்பாட்டைப் பயன்படுத்தலாம். குரல் அடிப்படையிலான கட்டளைகள் மூலம் தகவல்களை வழங்குவது இதன் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. இதன் பெயர் AskDisha 2.O. இதன் உதவியுடன், நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை மிக எளிதாக புக் செய்யலாம் ரத்து செய்யலாம். இதன் மூலம், PNR நிலையைச் சரிபார்க்கலாம். இவை அனைத்தையும் குரல் கட்டளை மூலம் செய்யலாம்.

IRCTC தனது புதிய AI அடிப்படையிலான சேவையான AskDISHA 2.0 மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை குரல் கட்டளை மூலம் செய்ய முடியும். ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. டிக்கெட்டுகள் ஒரு சில கிளிக்குகளில் முன்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பயண தேதி மற்றும் இடத்தைச் சொன்னால் போதும். உங்கள் பயண திட்டம் மாறினால், டிக்கெட்டை ரத்து செய்வதும் எளிது. பணத்தைத் திரும்பப் பெறும் நிலையைச் சரிபார்க்க PNR எண்ணை உள்ளிட்டால், உடனடியாகத் தகவலைப் பெறலாம். ரயில் எங்குள்ளது என்பதை நிகழ்நேரத்தில் பார்க்கலாம். உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

AskDISHA 2.0 சேவையைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. IRCTC வலைத்தளத்தைப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில் chatbot விருப்பம் தெரியும். டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பினால் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் என எதுவானாலும் அதனை உங்கள் குரல் கட்டளை மூலம் செயல்படுத்தலாம். ஆதார் அல்லது PAN அட்டை தகவல் இருக்க வேண்டும். ஆன்லைன் கட்டணம் செலுத்திய பிறகு, டிக்கெட் முன்பதிவு விபரம் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த சேவை 24×7 கிடைக்கிறது.அதை எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.

AskDISHA 2.0 உபயோகிப்பதால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. AskDisha 2.O ஒரு AI உதவியாளர். மக்கள் இந்த குரல் உதவியாளருடன் சாட் செய்யலாம் மற்றும் குரல் கட்டளை மூலம் தொடர்பு கொள்ளலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரத்து செய்வதை மிகவும் இதனை எளிதாக்கியுள்ளது. IRCTC AskDisha 2.0 பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும், PNR நிலையை அறிந்து கொள்வதற்கும், டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கும், பணத்தைத் திரும்பப் பெறும் நிலையை அறிந்து கொள்வதற்கும், போர்டிங் நிலையத்தை மாற்றுவதற்கும், முன்பதிவு வரலாற்றைப் பார்ப்பதற்கும், ERS பதிவிறக்குவதற்கும், ரயில்வே தொடர்பான கேள்விகளைக் கேட்பதற்கும் என பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.