ஈரான் மீண்டும் ஒருமுறை முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியுள்ளது. சில மணிநேரங்களுக்கு முன்புதான் ராணுவம் அல்லாத போக்குவரத்திற்காக இந்த வழித்தடம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்க அமெரிக்கா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இந்த முடிவை அறிவித்தது.

வாக்குறுதியை மீறிய அமெரிக்கா

ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-இல் வெளியான அறிக்கையில், அமெரிக்கா "முற்றுகை என்ற போர்வையில் தொடர்ந்து கடல் கொள்ளை மற்றும் கடல்சார் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக" இஸ்லாமிய புரட்சிகர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது.

ஹார்மூஸை ஜலசந்தியை மீண்டும் திறக்கும் முந்தைய முடிவு நிபந்தனைக்கு உட்பட்டது என்றும், அது அமெரிக்காவின் இணக்கத்தைப் பொறுத்தது என்றும் அந்தப் படை தெரிவித்தது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் மீண்டும் மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு ராணுவத் தலைமையகம் உத்தரவு

ஈரானின் மத்திய ராணுவத் தலைமையகம் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன், நீர்வழியின் மீது மீண்டும் "கடுமையான மேலாண்மை" நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டிருந்த தளர்வுகளை இந்த உத்தரவு ரத்து செய்கிறது.

ஈரானிய துறைமுகங்களுடன் தொடர்புடைய கப்பல்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்காததன் மூலம் தனது உறுதிமொழிகளை மீறிவிட்டதாகவும், இது பேச்சுவார்த்தை செயல்முறையில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஏற்பட்ட சுமுகமான பேச்சுவார்த்தையை அடுத்து 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரான் வெள்ளிக்கிழமை ஹார்மூஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மீண்டும் திறப்பதாக அறிவித்திருந்தது .

கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு

இந்த சமீபத்திய முன்னேற்றம் உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றில் இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், இங்கு விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடும் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானுடன் வணிகம் செய்யும் கப்பல்களுக்கு முழுமையான வழிசெலுத்தல் சுதந்திரம் கிடைக்கும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று ஈரானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.