IPL 2026: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்!

2 weeks ago 3
ARTICLE AD

IPL 2026: இந்தியாவில் டி20 கிரிக்கெட் போட்டிகளை மிகவும் பிரபலப்படுத்துவதற்காக பிசிசிஐ-யால் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடருக்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

19வது சீசன் ஐபிஎல்:

18 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், 19வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக சின்னசாமி மைதானத்தில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியும், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுவிட்டது.

அணிகள்:

ஐபிஎல் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர்.

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2. சென்னை சூப்பர் கிங்ஸ்

3. மும்பை இந்தியன்ஸ்

4. சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

6. குஜராத் டைட்டன்ஸ்

7. பஞ்சாப் கிங்ஸ்

8. டெல்லி கேபிடல்ஸ்

9. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

10.  ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்த 10 அணிகளுக்காகவும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டின் பிரபலமான வீரர்களும் ஆடுகின்றனர். இவர்களது ரசிகர்கள் இவர்களை ஊக்குவிப்பதற்காக மைதானங்களில் குவிந்து ஆர்ப்பரிப்பதும் வழக்கமான ஒன்றாகும்.

முதற்கட்ட அட்டவணை:

பல்லாயிரக்கான கோடி வர்த்தகம் நடைபெறும் ஐபிஎல் தொடர் நடப்பாண்டில் 5 மாநில தேர்தல் தேதி காரணமாக முதல் பாதி அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை முதற்கட்ட அட்டவணைப்படி நடக்கிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் தேர்தல் நடப்பதாலும், வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெறுவதாலும் அதற்கேற்ப அடுத்தகட்ட போட்டி அட்டவணைகள் தயார்படுத்தப்பட உள்ளது.

நட்சத்திரங்களும், இளைஞர்களும்:

மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, பாண்ட்யா, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் போன்ற மிகப்பெரிய நட்சத்திர வீரர்களும், ஜேக்கப் பெத்தேல், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், ஷிவம் துபே, ரியான் பராக், சாம்சன் போன்ற நட்சத்திரங்களும் ஆடுவதால் இந்த தொடர் மிகுந்த விறுவிறுப்பானதாக அமையும்.  அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும், திறமையான இளம் வீரர்களும் இணைந்து ஆடுவதால் சீனியர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும்.

கடந்த முறை ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி-யின் சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், அந்த ரசிகர்களுக்காக 11 இருக்கைகள் எப்போதும் காலியாக விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பார்ப்பது?

இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். பெரும்பாலான போட்டிகள் இரவு 7.30 மணிக்கு நடைபெறும். சில போட்டிகள் மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் வரும் 30ம் தேதி மோதுகிறது.

Read Entire Article